ஏனிந்த மாற்றமோ..?
பிரியமாய்
உன்னை
எண்ணும் போது
பூக்களின் வாசம்
என்னுள் வீசுதே
மௌனத்தின்
பாசையில்
நீ பேசும் போது
மனதோடு
கீதங்கள் பாடுதே
நீயென்றால்
நானாய்
நானென்றால்
நீயாய்
எம்மை நனைந்திட்ட
மழையும்
குடையுள் பூருமே
காற்றின் அலையில்
கலந்திட்ட
உன் மூச்சில்
என் சுவாசக்
காற்றும் கலந்திடுமே
மாற்றமாய்
ஒன்றும்
என்னில் இல்லை
உனக்குள் மட்டும்
ஏனிந்த மாற்றமோ..?
No comments:
Post a Comment