Friday, 29 May 2015
என் கண்ணில் இருட்டுத்தான்.
பதியைத் பாதையிலே
தொலைத்து நானும்
அகதியானேன்
சொந்த மண்ணில்
வீதியில் நடப்பதெல்லாம்
விதியில் எழுதியதாய்
விரும்பாமல்
வீடு தேடிவரும்
நான்
இந்த பெயரில்
கலர்புடவை கட்டி நானும்
நெற்றிகொரு பொட்டு
குங்குமத்தில்
வைக்கின்றேன்
எனக்கு துணையாகும்
என்று!
எனக்கு மட்டும்
தெரியவில்லை
என் துணைவன்
உயிரோடுதானா?
என்று
வீதிக்கு வந்துவிட்டேன்
என்
விதியை எண்ணி
அழுதுவிட்டேன்
ஆனாலும்
என்ன பயன்
பொழுதுமட்டும்
சாய்ந்துவிட்டால்
பூனைகளின்
முனகல்கூட
மிரட்டும்
என்னை
துணையில்லாத
ஏக்கத்தினால்
.!.
ஏங்குகின்ற
பிள்ளைக்கு
நான்
என்ன சொல்லி
புரியவைப்பேன்
தூங்குகண்ணே...
என்று சொல்லி
விழித்திருப்பேன்...
விடியும்வரை
வீதிக்கு வந்துவிட்டேன்
என்
விதியை எண்ணி
என்ன பயன் ?
பலருக்கு
பொழுது விடிந்தாலும்
புலருகின்ற பொழுதுகூட
என் கண்ணில்
இருட்டுத்தான்...!!!
29.05.2015
Thursday, 28 May 2015
காற்றை அள்ளித் தின்றுவிட்டு
பள்ளிக்கு வந்தேன்
பரபரப்பாய் என்
பகல்வேளைப்
பசி தீருமென்று.....
பரபரப்பாய் என்
பகல்வேளைப்
பசி தீருமென்று.....
பட்டினியாய்
விட்டில்
பரிதவிப்பாய்
பரிதவிப்பாய்
சின்னத்
தங்கையும்
என்
அன்னையும்
பகல்தான் எப்படி
நகருமென்று
அன்னையும்
பகல்தான் எப்படி
நகருமென்று
பகலவன் மட்டும்
வந்து வந்து
வந்து வந்து
போகின்றான்
பாசமாய் நின்று
வெந்து நொந்து
பாசமாய் நின்று
வெந்து நொந்து
போகின்றான்
அயலவன் மட்டும்
அறியவில்லை
அடுப்படியில் பூனையும்
அறியவில்லை
அடுப்படியில் பூனையும்
பானையும்
தூங்கும் வரையும்
அடுப்பில் எதுவும்
புகையவில்லை
அம்மா வயிறுமட்டும்
புகையுதென்று
புகையுதென்று
இங்கு
தட்டில் இட்ட
சோறுமட்டும்
கனமாய்
கனமாய்
எனக்கு தெரியுதம்மா
காற்றை அள்ளித்
காற்றை அள்ளித்
தின்றுவிட்டு
தண்ணியை நீ
தண்ணியை நீ
குடிப்பாய் என்று...
28.05.2015
Wednesday, 27 May 2015
உயிரின் உயிராகி
ஒன்றா இரண்டா
காரணம்
நூறு
சில
காரியம்
வேறு
நீ கேட்டால்
நான் சொல்வேன்
கேட்காவிட்டாலும்
நான் வெல்வேன்
நீ
இட்டுச் சென்ற
தடயங்கள்
இடைமறித்த
விடயங்கள்
தடம் பதித்த
ஈடில்லா
நேரத்தில்
விடை தேடும்
பயணங்கள்
திசை மாறிப்
போனாலும்
உயிரின் உயிராகி
ஊற்றெடுக்கும்
ராகங்கள்
இரவின் மடியில்
உன் நிழலின்
பிடியில்
இதயத்தை
மீட்டி
எப்போதும்
என் கூடப்
பயணிக்கும்...
27.05.2015
காரணம்
நூறு
சில
காரியம்
வேறு
நீ கேட்டால்
நான் சொல்வேன்
கேட்காவிட்டாலும்
நான் வெல்வேன்
நீ
இட்டுச் சென்ற
தடயங்கள்
இடைமறித்த
விடயங்கள்
தடம் பதித்த
ஈடில்லா
நேரத்தில்
விடை தேடும்
பயணங்கள்
திசை மாறிப்
போனாலும்
உயிரின் உயிராகி
ஊற்றெடுக்கும்
ராகங்கள்
இரவின் மடியில்
உன் நிழலின்
பிடியில்
இதயத்தை
மீட்டி
எப்போதும்
என் கூடப்
பயணிக்கும்...
27.05.2015
Tuesday, 26 May 2015
நான் வாழும் தேசம்..
என் தேகம்
உன் சுவாசம்
ஒன்றாகத்தானே
பயணிக்கின்றது...
உன் கண்கள்
பட்டுக்
கலைகின்ற
மேகம்
என் கண்ணைப்
பார்க்கதானே
வருகின்றது....
உன் கைகள்
பட்ட
ஒரு பூவின்
வாசம்
என்னுள்ளே
வரும்பொழுது
என் எண்ணங்கள்
யாவும்
பூங்காவனம்..
நீ காட்டும் நேசம்
நிச்சயமாய்
இருக்கின்ற
வரைக்கும்
நீதானே
தினமும்
நான் வாழும் தேசம்..
26.05.2015
உன் சுவாசம்
ஒன்றாகத்தானே
பயணிக்கின்றது...
உன் கண்கள்
பட்டுக்
கலைகின்ற
மேகம்
என் கண்ணைப்
பார்க்கதானே
வருகின்றது....
உன் கைகள்
பட்ட
ஒரு பூவின்
வாசம்
என்னுள்ளே
வரும்பொழுது
என் எண்ணங்கள்
யாவும்
பூங்காவனம்..
நீ காட்டும் நேசம்
நிச்சயமாய்
இருக்கின்ற
வரைக்கும்
நீதானே
தினமும்
நான் வாழும் தேசம்..
26.05.2015
Sunday, 24 May 2015
உன்னோடு நான்
தொடரும் ஏக்கங்கள்
தூக்கத்தைக்
கலைக்க
தோட்டுச் சுரைக்குள்
ரகசியம்
கலக்க
தோற்றம்
அளிக்கிறது
தொலைவாய்
உன் முகம்...
தெளியும் நிலவில்
கலையும் மேகமாய்
வானில் எழுதும்
வண்ணக் கனவுகள்
இரவு முழுவதும்
பேசிக் கழைத்துப்
என் படுக்கை
விரிப்பில்
விடியும் வரைக்கும்
குட்டித் தூக்கம்
உன்னோடு நான்
கனாவிலே....
24.05.2015
தூக்கத்தைக்
கலைக்க
தோட்டுச் சுரைக்குள்
ரகசியம்
கலக்க
தோற்றம்
அளிக்கிறது
தொலைவாய்
உன் முகம்...
தெளியும் நிலவில்
கலையும் மேகமாய்
வானில் எழுதும்
வண்ணக் கனவுகள்
இரவு முழுவதும்
பேசிக் கழைத்துப்
என் படுக்கை
விரிப்பில்
விடியும் வரைக்கும்
குட்டித் தூக்கம்
உன்னோடு நான்
கனாவிலே....
24.05.2015
Saturday, 23 May 2015
தொலைவாய் கேட்கும் இதய ராகம்.....
நேற்றுவரை
நடந்ததெல்லாம்
நாளைவரை
இல்லையென்று
இன்றுவரை
தெரியவில்லை
உனக்கும்
எனக்கும்
இடையிலான
தனிமைப்
போராட்டத்தில்
தானாக
ஜெபிக்கிறது
தணியாத
அன்பு....
கடந்து வந்த
கரடு முரடான
பாதையில்
எப்போதும்
எனக்கு
ஊக்கம்
கொடுக்கும்
ஒரு இசைமட்டும்
அங்கு
இசைத்துக்
கொண்டே
இருக்கிறது
இன்று
தொலைவாய்
கேட்கும்
இதய ராகம்.....
23.05.2015
நடந்ததெல்லாம்
நாளைவரை
இல்லையென்று
இன்றுவரை
தெரியவில்லை
உனக்கும்
எனக்கும்
இடையிலான
தனிமைப்
போராட்டத்தில்
தானாக
ஜெபிக்கிறது
தணியாத
அன்பு....
கடந்து வந்த
கரடு முரடான
பாதையில்
எப்போதும்
எனக்கு
ஊக்கம்
கொடுக்கும்
ஒரு இசைமட்டும்
அங்கு
இசைத்துக்
கொண்டே
இருக்கிறது
இன்று
தொலைவாய்
கேட்கும்
இதய ராகம்.....
23.05.2015
என் குற்றம்தான்.
நேரிய பாதையில்
நீண்ட
அந்தப் பயணத்தில்
என்
அமைதியை
அடித்துப் பறித்த
அந்த சம்பவம்..
ஒரு வழிப்போக்கனாய்
இருந்த என்னை
வாரி இழுத்து
விழுத்தியது
வாழ்வா சாவா
என்று
விழுந்து கிடந்த
அந்தக்
குற்றுயிரை
காப்பாற்றும்
என் மனம்....
பின் விளைவுகளை
தெரியாமல்
பிடரி மண்டையில்
பலமாய்
அடி விழும்வரை
சுயனலமாய்
இருந்தவனைக்
காப்பாற்றுவதிலேயே
குறியாய்
இருந்தது
என் குற்றம்தான்.
சாட்சியமாய்
உண்மைகள்
இருமருங்கிலும்
பதுங்கியே
இன்னும்
ஒழிந்தே இருக்கலாம்.
யாருமே இல்லாமல்
வெறிச்சோடி
கிடக்கும்
பாதையில்
குற்றவாளியை
பக்கத்தில்
இருந்தே
பார்த்த
மரங்களுக்குள்
நெருடல்கள்
இப்பவும்
இருக்கலாம்...
23.05.2015
நீண்ட
அந்தப் பயணத்தில்
என்
அமைதியை
அடித்துப் பறித்த
அந்த சம்பவம்..
ஒரு வழிப்போக்கனாய்
இருந்த என்னை
வாரி இழுத்து
விழுத்தியது
வாழ்வா சாவா
என்று
விழுந்து கிடந்த
அந்தக்
குற்றுயிரை
காப்பாற்றும்
என் மனம்....
பின் விளைவுகளை
தெரியாமல்
பிடரி மண்டையில்
பலமாய்
அடி விழும்வரை
சுயனலமாய்
இருந்தவனைக்
காப்பாற்றுவதிலேயே
குறியாய்
இருந்தது
என் குற்றம்தான்.
சாட்சியமாய்
உண்மைகள்
இருமருங்கிலும்
பதுங்கியே
இன்னும்
ஒழிந்தே இருக்கலாம்.
யாருமே இல்லாமல்
வெறிச்சோடி
கிடக்கும்
பாதையில்
குற்றவாளியை
பக்கத்தில்
இருந்தே
பார்த்த
மரங்களுக்குள்
நெருடல்கள்
இப்பவும்
இருக்கலாம்...
23.05.2015
Friday, 22 May 2015
எப்போதும் நான் இருப்பேன்
கண் போன
போக்கெல்லாம்
நீ போன
பொழுதெல்லாம்
உன் கூடவேதான்
நான் இருந்தேன்.
மழையென்றும்
வெய்யிலென்றும்
இடை வந்த போதும்
உன் வழிக்குத்
துணையாக
அப்போதும்
நான் இருந்தேன்
மேடுகளும்
பள்ளங்களும்
தடை போட்ட
பொழுதுகளும்
வீடுவரை சேரும்வரை
உன்னோடுதான்
நான் இருந்தேன்
சுமை எல்லாம்
தாங்கும்வரை
உன்
வலிதாங்கியே
உன் வழியெல்லாம்
நான் இருந்தேன்
களட்டி விட்ட
இடத்திலேயே
நீ என்னை
மறந்தாலும்
நீ
பூட்டிய
கதவிற்கு
வெளியே
எப்போதும்
நான் இருப்பேன்
உன் கால் செருப்பாக.....
22.05.2015
போக்கெல்லாம்
நீ போன
பொழுதெல்லாம்
உன் கூடவேதான்
நான் இருந்தேன்.
மழையென்றும்
வெய்யிலென்றும்
இடை வந்த போதும்
உன் வழிக்குத்
துணையாக
அப்போதும்
நான் இருந்தேன்
மேடுகளும்
பள்ளங்களும்
தடை போட்ட
பொழுதுகளும்
வீடுவரை சேரும்வரை
உன்னோடுதான்
நான் இருந்தேன்
சுமை எல்லாம்
தாங்கும்வரை
உன்
வலிதாங்கியே
உன் வழியெல்லாம்
நான் இருந்தேன்
களட்டி விட்ட
இடத்திலேயே
நீ என்னை
மறந்தாலும்
நீ
பூட்டிய
கதவிற்கு
வெளியே
எப்போதும்
நான் இருப்பேன்
உன் கால் செருப்பாக.....
22.05.2015
Thursday, 21 May 2015
மேச்சலுக்கு வரும் மாடுகள்
விதி எழுதிய
பாதைகளில்
விரித்து வைத்த
பாடங்களை
ஒவ்வொன்றாய்
படித்து
வீதியிலே
இறங்கிய போதும்
வரலாறு நெஞ்சை
இறுக்கி நெரிக்க
மொழியை
விழுங்கி
மொட்டாக்குப்
போட்டாலும்
மேச்சலுக்கு
வரும்
மாடுகள்
பயிரை மேயப்
பார்த்துக்
கொண்டிருக்கும்
தோட்டத்து
வெருளி
என்னதான் செய்யப்
போகிறது
கையிரண்டையும்
நீட்டியபடி...
அருள் நிலா வாசன்
21.05.2015
பாதைகளில்
விரித்து வைத்த
பாடங்களை
ஒவ்வொன்றாய்
படித்து
வீதியிலே
இறங்கிய போதும்
வரலாறு நெஞ்சை
இறுக்கி நெரிக்க
மொழியை
விழுங்கி
மொட்டாக்குப்
போட்டாலும்
மேச்சலுக்கு
வரும்
மாடுகள்
பயிரை மேயப்
பார்த்துக்
கொண்டிருக்கும்
தோட்டத்து
வெருளி
என்னதான் செய்யப்
போகிறது
கையிரண்டையும்
நீட்டியபடி...
அருள் நிலா வாசன்
21.05.2015
Wednesday, 20 May 2015
பூட்டிய கதவுக்குள்
எப்பவும் போல
ஒரு கதவு
மூடினால்
இன்னொரு
கதவு
உனக்காகத்
திறக்கும்
நம்பிக்கை
என்னை
வாவென்று
அழைத்தது....
இரவு முழுவதும்
யன்னல் விழிம்பில்
தட்டிக் கொண்டிருந்த
மழைத் துளிகள்
யதார்த்தக் கதைகளை
அங்கேயே
விட்டுச் சென்றிருந்தது...
நிலவு
சூரியனுக்காய்
காத்திருந்த
நிசப்தம்
இரவைச்
சுருட்டி வைத்துப்
பகலை
விரிக்கத் தொடங்க....
எனக்குள் ஒழிந்திருந்த
அதே
நினைவுகள்
வெளியே
ஒலித்துக்
கொண்டிருக்கும்
ஒரு குரலில்
அதே பாடல்
வரிகளைக்
கேட்டு
கதவைத் திறந்தபோது
காற்று மட்டும்
தனியாக
உள்ளே நுழைந்தது......
அருள் நிலா வாசன்....
20.05.2015
ஒரு கதவு
மூடினால்
இன்னொரு
கதவு
உனக்காகத்
திறக்கும்
நம்பிக்கை
என்னை
வாவென்று
அழைத்தது....
இரவு முழுவதும்
யன்னல் விழிம்பில்
தட்டிக் கொண்டிருந்த
மழைத் துளிகள்
யதார்த்தக் கதைகளை
அங்கேயே
விட்டுச் சென்றிருந்தது...
நிலவு
சூரியனுக்காய்
காத்திருந்த
நிசப்தம்
இரவைச்
சுருட்டி வைத்துப்
பகலை
விரிக்கத் தொடங்க....
எனக்குள் ஒழிந்திருந்த
அதே
நினைவுகள்
வெளியே
ஒலித்துக்
கொண்டிருக்கும்
ஒரு குரலில்
அதே பாடல்
வரிகளைக்
கேட்டு
கதவைத் திறந்தபோது
காற்று மட்டும்
தனியாக
உள்ளே நுழைந்தது......
அருள் நிலா வாசன்....
20.05.2015
Tuesday, 19 May 2015
நான் தேடிப் போனதெல்லாம்
உறுதிப்படுத்தாமல்
உணர்வுகளைத்
தடுக்காமல்
தேடிப் போனபோது
மூடிய கதவு
அப்படியே
வைத்த கண்
வாங்காமல்
என்னையே பார்த்தது.
சுற்றும் முற்றும்
நாள் தோறும்
நடக்கும்
காட்சிகள்
வழமை போல்
இருந்தது..
ஏனிந்த சோகம்
மறுபடியும்
கேட்டது
அங்கு
இசைத்துக்
கொண்டிருந்த
ஒரு ராகம்.....
அதே வேகம்
தாக்கியது
என் நெஞ்சம்
நான்
தேடிப் போனதெல்லாம்
அப்படி அப்படியே
இருந்தது
உன்னைத் தவிர.....
இன்றுதான்
உனக்குள்
இதுவரை
இருந்த என்னை
நீ
கொன்றாய்...
19.05.2015
உணர்வுகளைத்
தடுக்காமல்
தேடிப் போனபோது
மூடிய கதவு
அப்படியே
வைத்த கண்
வாங்காமல்
என்னையே பார்த்தது.
சுற்றும் முற்றும்
நாள் தோறும்
நடக்கும்
காட்சிகள்
வழமை போல்
இருந்தது..
ஏனிந்த சோகம்
மறுபடியும்
கேட்டது
அங்கு
இசைத்துக்
கொண்டிருந்த
ஒரு ராகம்.....
அதே வேகம்
தாக்கியது
என் நெஞ்சம்
நான்
தேடிப் போனதெல்லாம்
அப்படி அப்படியே
இருந்தது
உன்னைத் தவிர.....
இன்றுதான்
உனக்குள்
இதுவரை
இருந்த என்னை
நீ
கொன்றாய்...
அருள் நிலா வாசன்...
19.05.2015
Wednesday, 13 May 2015
அப்படியே இருந்துவிடு
அடித்துத் துவைத்து
அழுக்கை எல்லாம்
உன்னில்
கழுவிக் காயப்
அழுக்கை எல்லாம்
உன்னில்
கழுவிக் காயப்
போட்டதெல்லாம்
வெள்ளையாகத்
தெரியும்
அடித்தவரும்
அடிக்கக்
கொடுத்தவரும்
நோக்கமெல்லாம்
ஒன்றேதான்
இன்னொரு தடவை
உன்னை
அவர்களுக்குத்
தேவைப்படும் வரை
அப்படியே
இருந்துவிடு
சுத்தமான
சலவைக்கல்லாக......
அருள் நிலா வாசன்.
13.05.2015
Tuesday, 12 May 2015
தனி வழிக்குத் துணையாய்.......
எமக்குள் எழுகின்ற
எண்ணங்கள்
யாவும்
எமக்காக
நாம் வரைகின்ற
வண்ணக்
கோலங்கள்....
விதைத்ததைத்தானே
அறுக்கச் சொல்லிப்
படைத்தவன்
எம்மை
பணிக்கின்றான்....
மேகம் விட்ட
கண்ணீரெல்லாம்
மலையைத் தொட்ட
பன்னீராகி
இசையின் அசைவொடு
விரையும்
ஆற்றின்
அதிர்வைக் கேட்டு
வித்தை காட்டி
விரசிக்
கொள்ளும்
மரங்கள்...
அங்குமிங்கும்
ஆடி அசைந்து
கரையைத்
தொட்டுக்
கடந்து செல்லும்
ஆற்றைக் கண்டு
தலையசைத்து
அதுபாட்டிற்கு
வழியனுப்ப....
நீண்ட பயணத்தின்
முடிவைத் தேடி
ஓடுகின்ற
ஆற்றைப் போல
நாளும் பொழுதும்
ஓடிக் கழைக்கும்
நானிலத்தில்
மானிடர்க்கு
இழப்பதற்கென்று
இவ் உலகில்
எதுவுமே இல்லை...
தனி வழிக்குத்
துணையாய்
கூட்டிச் செல்லும்
ஓடி ஓடிச்சேர்த்துக்
கொண்ட
புண்ணியமும்
பாவமும்....
அருள் நிலா வாசன்
12.05.2015
Monday, 11 May 2015
முள்ளிவாய்க்காலில் ஒரு முகவரி.......
போருக்குப் பின்
ஊருக்காய் என்
பயணம்
அடிப்பெட்டியைக்
கிளறிய
என் கண்ணில்
அவனின் முகவரி
அப்படியே
அழியாமல்.......
அவன்
ஆசைப்பட்டு கேட்ட
அந்தக்
கடிகாரம்
எனக்கென்று
அவனனுப்பி
வைத்த
கோடு போட்ட
சாரம்
அவனைக்
கண்டு கனகாலம்
என்
ஆவலுக்கு
அசைபோட்டு
அடுத்தமாதமே
அவசரமாய்
கிளம்பியது
என்
ஆகாயப்பயணம்,,,,
அடுத்த நாள
யாழ்தேவி
அதிகாலை
அது கூவி
வடக்கு
வடக்கென்று
அது
அடித்து சொல்ல.......
மண்ணின் வாசனையில்
மனசெல்லாம்
மழை பெய்ய
யன்னலோரமாய்
அப்படியொரு
சயனம்
அடுக்கடுக்காய்
அந்த நாள்
ஞாபகம்
அவனைக் காணத்
துடித்தது
என் மனம்
பெட்டியோடு
இறங்கினேன்
பெட்டிக்
கடையில்
வடையோடு
வெறும் தேத்தண்ணி.........
வருசக் கணக்கில்
ருசி தெரியாத
என் நாக்கு
சொன்னது
ஆஹா என்ன
அருமை.....
வாழைப்பழக்
கடை
வரிசையாய்
பல கடை
ஏறி இறங்கி
அவன் முகவரி
மட்டும் இன்னும்
அழியாம்ல
என் கையில்.......
பொடி நடையில்
இறங்கினேன்
போகப் போக
ஒரே வெளி
பொறுமையிழந்த
கால் வலி
விசாரித்துப் பிடித்த
அவன்
வீட்டுக்
கூரையைக்
காணவில்லை
வீட்டுக் கதவு
மட்டும்
பூட்டியே கிடந்தது....
அருள் நிலா வாசன்
Wednesday, 6 May 2015
கடைசியில நடந்ததென்ன?...
சாத்தி வைச்ச
சையிக்கிளுக்கு
காத்துப் போனது
தெரியாமல்
கல்லு வண்டில்
வருகுதென்று
கரைக்குப் போகச்
சொல்லிச் சொல்லி
கையாலே
சைகை காட்டிக்
கடைசியில நடந்ததென்ன?...
குத்தரிசிச் சோறு
வடிச்சு
காச்சி வைச்ச
கருவாட்டுக்
குழம்புக்குக்
கூட்டான
கறியொன்று
வேணுமென்று
சுண்டி வைச்ச
முருங்கையிலை
மூன்று வீட்டுக்கு
மணக்குதென்று
முத்துலச்சுமி தேடி வர.....
முத்தத்தில நின்ற
தேசிமரத்தில் ,,,,நீ
முழுக நாலு
தேசிக்காய்
மும்மரமாய் நான் தேட...
முந்தாணையில்
முடிஞ்சு வந்த
மூன்று முடிச்சுக்
கதை எல்லாம்
முழுசு முழுசாய்
அவிண்டு விழ
தேடிவந்த சீமாட்டி
போன வழி
தெரியாமல்
பொழுது சாயும்வரை
பொறுமையின்றி
நான் முழித்தேன்....
கறியோடு
முருங்கையிலை
கைமணக்கக் குழைச்சே
நானும்
காலைச் சுத்தி வந்த
நாய்க்கு நன்றியோட
படையலிட்டேன்.....
கண் கண்ட
தெய்வமென்று
கடைசிவரை
நம்பிக்
கந்தறுந்து போன
என் கண்ணில
நீர் கசிய......
காலைத் தூக்கி
வாலை ஆட்டி
கலங்காத காமாட்சி
என்று முனகிய
அந்த சீவன்
எனக்கு
என்றென்றும் நல்ல துணை......
Monday, 4 May 2015
பூவே உன் பெயர் என்ன.....?
பூஜைக்கு வந்தமலரே
தட்டில் சில
பூவிருக்க
உன் கூந்தலில்
தட்டில் சில
பூவிருக்க
உன் கூந்தலில்
ஒரு பூவிருக்க
அந்த ரோஜாவை
நான் தொடர
ராஜாத்தி உன் பாதம்
ரசனையுடன்
நடை பழகக்
கல்லொன்றில்
கால் இடர
நடைவேகம்தான்
குறைய
இடைவெளியில்
இடம் மாறித்
தரை தொட்ட
உன் பூவை
நான் எடுக்க
உன் கைபட்ட
பூ என்னை
பஞ்சாகித்
தடவத்தான்
திரும்பிப் பார்க்காமல்
போகும் பூவே
உன்
பெயர் என்ன.....?
அருள் நிலா வாசன்
7.02.2015
Saturday, 2 May 2015
அதே நாள் அதே இடத்தில்
அந்த ஒரு நாள்
நீ என்னை
சந்திக்க வந்த பொழுது
நீ சொன்னதெல்லாம்
இப்பவும்
என்னோடு
இருக்கிறது.....
நீண்டு போகும் பாதையில்
நீ காணும் போதையில்
மீண்டு வரமுடியாமல்
நிலை தடுமாறியே
உனக்குள் தனியாக
ஓடிக்கொண்டிருக்கும்
உன் ஆசைக் குதிரையில்
வேகமாய் உன் பயணம்
இப்போதைக்கு
அமையலாம்....
வேகம் குறைந்து
தாகம் எடுக்கும்போது
நீ பூட்டிவைத்துப்
புறப்பட்ட
உன் மனக் கதவை
மெதுவாகத்
திறந்து பார்....
பாகம் பிரிவின்றி
சாகும்வரை
உனக்காகக்
காத்திருந்த
உயிர்
தன்னையும்
மறந்து
அங்கேயே இருக்கும்....
அதே நாள்
அதே இடத்தில்
அதே உணர்வுகளில்
அதே உண்மையோடு
அப்படியே
உன்னோடு....
அருள் நிலா வாசன்
02.05.2015
என்னோடு
இருக்கிறது.....
நீண்டு போகும் பாதையில்
நீ காணும் போதையில்
மீண்டு வரமுடியாமல்
நிலை தடுமாறியே
உனக்குள் தனியாக
ஓடிக்கொண்டிருக்கும்
உன் ஆசைக் குதிரையில்
வேகமாய் உன் பயணம்
இப்போதைக்கு
அமையலாம்....
வேகம் குறைந்து
தாகம் எடுக்கும்போது
நீ பூட்டிவைத்துப்
புறப்பட்ட
உன் மனக் கதவை
மெதுவாகத்
திறந்து பார்....
பாகம் பிரிவின்றி
சாகும்வரை
உனக்காகக்
காத்திருந்த
உயிர்
தன்னையும்
மறந்து
அங்கேயே இருக்கும்....
அதே நாள்
அதே இடத்தில்
அதே உணர்வுகளில்
அதே உண்மையோடு
அப்படியே
உன்னோடு....
அருள் நிலா வாசன்
02.05.2015
Friday, 1 May 2015
என் தப்புத்தான்....
எதிர்விட்டு யன்னல்
எப்பவும் போல
பூட்டியே
இருந்தது
வெள்ளைப் பாய்
விரித்த
நித்திய
கல்யாணிப்பூக்கள்
நிலத்தை
மறைத்தது
அவள் வீட்டில்
இல்லாதது
தெரிந்தது
வந்தவுடன்
வரவேற்று
வாலாட்டும்
நாய்
சோகத்தை
சுமக்கத்
தாங்காத
தலையை
தொங்கவிட்டு
தூக்கம் போல்
நடித்தது
வழி நெடுக
தேடியும்
தெய்வத்தை
வரி வரியாய்
பாடியும்
வராத
உன் பார்வையைத்
தேடித் தேடி
வழி தெரியாமல்
நடந்தேன்
வாங்கி வந்த
பத்திரிகையை
வழக்கம் போல்
வரிக்கு வரி
படிக்க
என் வீட்டு
வாசலில்
வைத்தே விரித்தேன்...
முன் பக்கச் சேதியில்
மீட்டு வந்த
நகையுமின்றி
வீட்டு வாடகைக்கு
வழியுமின்றித்
தயக்கமுள்ள
தனிமையில்
வீட்டுக்கு வரப்பயந்து
வேகமாய் வந்த
வாகனத்துக்கு
தன் உயிரைக்
கொடுத்தாள்
வாசுகி.....
கண்ணீரில்
கரைந்த
எழுத்துக்கள்
மெல்ல மெல்ல
என்
கண்ணைவிட்டுக்
காணாமல்
போனது
உன்னைப் போல...
எதிர் வீட்டு
யன்னலுக்குள்
குடியிருந்த
உன்னிடம்
சொல்லத்
துணிவின்றி
சொல்லாமல்
விட்டது
என் தப்புத்தான்...
வாடகையே
இல்லாமல்
உனக்காகக்
காத்திருந்த
என் இதயத்தில்
குடி
இருக்க
வா
சுகியென்று
சொல்லாமல்
விட்டது
என் தப்புத்தான்....
Subscribe to:
Comments (Atom)

















