Saturday, 2 May 2015

அதே நாள் அதே இடத்தில்

அந்த ஒரு நாள்
நீ என்னை
சந்திக்க வந்த பொழுது
நீ சொன்னதெல்லாம்
இப்பவும்
என்னோடு
இருக்கிறது.....

நீண்டு போகும் பாதையில்
நீ காணும் போதையில்
மீண்டு வரமுடியாமல்
நிலை தடுமாறியே

 உனக்குள் தனியாக
 ஓடிக்கொண்டிருக்கும்
உன் ஆசைக் குதிரையில்
வேகமாய் உன் பயணம்
இப்போதைக்கு
அமையலாம்....

வேகம் குறைந்து
தாகம் எடுக்கும்போது
நீ பூட்டிவைத்துப்
புறப்பட்ட
உன் மனக் கதவை
மெதுவாகத்
திறந்து பார்....

பாகம் பிரிவின்றி
சாகும்வரை
உனக்காகக்
காத்திருந்த
உயிர்
தன்னையும்
மறந்து
அங்கேயே இருக்கும்....

அதே நாள்
அதே இடத்தில்
அதே உணர்வுகளில்
அதே உண்மையோடு
அப்படியே
உன்னோடு....

அருள் நிலா வாசன்
02.05.2015                           

No comments:

Post a Comment