சாத்தி வைச்ச
சையிக்கிளுக்கு
காத்துப் போனது
தெரியாமல்
கல்லு வண்டில்
வருகுதென்று
கரைக்குப் போகச்
சொல்லிச் சொல்லி
கையாலே
சைகை காட்டிக்
கடைசியில நடந்ததென்ன?...
குத்தரிசிச் சோறு
வடிச்சு
காச்சி வைச்ச
கருவாட்டுக்
குழம்புக்குக்
கூட்டான
கறியொன்று
வேணுமென்று
சுண்டி வைச்ச
முருங்கையிலை
மூன்று வீட்டுக்கு
மணக்குதென்று
முத்துலச்சுமி தேடி வர.....
முத்தத்தில நின்ற
தேசிமரத்தில் ,,,,நீ
முழுக நாலு
தேசிக்காய்
மும்மரமாய் நான் தேட...
முந்தாணையில்
முடிஞ்சு வந்த
மூன்று முடிச்சுக்
கதை எல்லாம்
முழுசு முழுசாய்
அவிண்டு விழ
தேடிவந்த சீமாட்டி
போன வழி
தெரியாமல்
பொழுது சாயும்வரை
பொறுமையின்றி
நான் முழித்தேன்....
கறியோடு
முருங்கையிலை
கைமணக்கக் குழைச்சே
நானும்
காலைச் சுத்தி வந்த
நாய்க்கு நன்றியோட
படையலிட்டேன்.....
கண் கண்ட
தெய்வமென்று
கடைசிவரை
நம்பிக்
கந்தறுந்து போன
என் கண்ணில
நீர் கசிய......
காலைத் தூக்கி
வாலை ஆட்டி
கலங்காத காமாட்சி
என்று முனகிய
அந்த சீவன்
எனக்கு
என்றென்றும் நல்ல துணை......

No comments:
Post a Comment