விதி எழுதிய
பாதைகளில்
விரித்து வைத்த
பாடங்களை
ஒவ்வொன்றாய்
படித்து
வீதியிலே
இறங்கிய போதும்
வரலாறு நெஞ்சை
இறுக்கி நெரிக்க
மொழியை
விழுங்கி
மொட்டாக்குப்
போட்டாலும்
மேச்சலுக்கு
வரும்
மாடுகள்
பயிரை மேயப்
பார்த்துக்
கொண்டிருக்கும்
தோட்டத்து
வெருளி
என்னதான் செய்யப்
போகிறது
கையிரண்டையும்
நீட்டியபடி...
அருள் நிலா வாசன்
21.05.2015

No comments:
Post a Comment