உணர்வுகளைத்
தடுக்காமல்
தேடிப் போனபோது
மூடிய கதவு
அப்படியே
வைத்த கண்
வாங்காமல்
என்னையே பார்த்தது.
சுற்றும் முற்றும்
நாள் தோறும்
நடக்கும்
காட்சிகள்
வழமை போல்
இருந்தது..
ஏனிந்த சோகம்
மறுபடியும்
கேட்டது
அங்கு
இசைத்துக்
கொண்டிருந்த
ஒரு ராகம்.....
அதே வேகம்
தாக்கியது
என் நெஞ்சம்
நான்
தேடிப் போனதெல்லாம்
அப்படி அப்படியே
இருந்தது
உன்னைத் தவிர.....
இன்றுதான்
உனக்குள்
இதுவரை
இருந்த என்னை
நீ
கொன்றாய்...
அருள் நிலா வாசன்...
19.05.2015

No comments:
Post a Comment