உருக்குலைந்த
மனதோடு
ஊருக்கே போகத்துணிந்து
உடுப்பு மடித்து
வைத்த கைகள்
உழையத் தொடங்கியது
சத்தமின்றித் திறந்த
கதவை
உத்துப் பார்த்த
என் கண்கள்
உருண்டு
உன்னை
விழுங்கியது
எங்கிருந்தோ
எனக்குள்
வந்த அந்த
ஒரு உற்சாகம்
எல்லை மீறியே
எட்டியே பார்த்தது
எப்படியோ
அதைக்
கேட்டுவிடலாமென்று
துடித்த என்
வாயைக்
கட்டிப்போட்டது
வியர்த்துப் போன
உன் கண்களில்
உதிர்ந்து
விழுந்த
ஈரப் பார்வை....
மூடிக் கொண்டிருந்த
வானம்
முழுசாய்
கொட்டுமுன்னர்
படித்து முடித்தேன்
நீ சொல்ல வந்த
வாசகத்தின்
முகவரியை....
நீ
எனக்கு மட்டும்
சொல்ல வந்த
இதுவரைக்கும்
சொல்லாத
அந்த
உள்வீட்டு
ரகசியத்தை
ஊருக்கே
சொன்னபோது
ஊரூராய் பறந்த
அந்த பிரியமுள்ள
ஊர்க்குருவி
பிரிந்து வந்த
துணையைத் தேடி
ஊரைவிட்டே பறந்தது......






