பகலெல்லாம் பாதையோரம்
பாடிக் கழைத்தவனின்
ஆதார சுருதியில்
பலரின் கதை
அதே வீதியில்
விதியோடு
ஒட்டிக்கொண்டிருந்தது
கைவிரல்களின்
இழுவைக்குள்
அவன்
கொண்டுவந்த
சங்கதிகள்
இழுத்துக்
கொண்டுவந்த
ஆனந்த ராகம்...
நேரத்தின் பின்னால்
அவசரமாய்ப்
போனவர்களை
இழுத்துப் பிடித்துச்
சில்லறைகளைச்
சிதற வைக்க
விரித்து வைத்த
துணியில்
சிரித்துக் கிடந்த
வெள்ளி நாணயங்கள்
வேகமாய் வந்தவரின்
சிந்தனையைச்
சீராகக் கிளறிவிட
இன்றைக்கு
இது போதுமென்று
போலிக்
காலையெடுத்துப்
பொறுமையோடு
பொருத்தியவன்
கூடு திரும்பும்
குருவிகளின்
கூட்டு இசையில்
வீடு திரும்பும்
நேரத்தைத்
தெளிவாய்
தெரிந்து கொள்கிறான்
பார்வையே இல்லாதவன்...
அருள் நிலா வாசன்
08-07-2015 ,
விதியோடு
ஒட்டிக்கொண்டிருந்தது
கைவிரல்களின்
இழுவைக்குள்
அவன்
கொண்டுவந்த
சங்கதிகள்
இழுத்துக்
கொண்டுவந்த
ஆனந்த ராகம்...
நேரத்தின் பின்னால்
அவசரமாய்ப்
போனவர்களை
இழுத்துப் பிடித்துச்
சில்லறைகளைச்
சிதற வைக்க
விரித்து வைத்த
துணியில்
சிரித்துக் கிடந்த
வெள்ளி நாணயங்கள்
வேகமாய் வந்தவரின்
சிந்தனையைச்
சீராகக் கிளறிவிட
இன்றைக்கு
இது போதுமென்று
போலிக்
காலையெடுத்துப்
பொறுமையோடு
பொருத்தியவன்
கூடு திரும்பும்
குருவிகளின்
கூட்டு இசையில்
வீடு திரும்பும்
நேரத்தைத்
தெளிவாய்
தெரிந்து கொள்கிறான்
பார்வையே இல்லாதவன்...
அருள் நிலா வாசன்
08-07-2015 ,

No comments:
Post a Comment