Wednesday, 8 July 2015

என் தாலியைத் தேடி

கடைக்காரனின்
கணக்கும்
அவனடித்த
சரக்குப்போல
கணக்கு
வழக்கில்லாமல்
ஏறிக்
கொண்டிருக்கிறது

சீனி பருப்பெல்லாம்
சில்லறைக்கு
வாங்கினாலும்
வேணுமென்றே
கடைக்காரன்
கட்டித் தந்த
கிழிஞ்ச 
கடதாசிப்பையில்
வழி வழியே
கொட்டியது போக
என் கையில்
கிட்டியது
கொஞ்சம்தான்...

எத்தனை
நாளுக்குத்தான்
பாணும் பருப்புக்கும்
வெறும்
தேத்தண்ணிக்கும்
உள்ளங்கையை
நக்குவது..

துலைஞ்சு போன
என் புருசன்
நான்
தூங்கிச்
செத்தாலும்
என் தாலியைத்
தேடி வருவானோ..?
தன் மனைவி
முகத்தைத்
தேடுவானோ..?

துண்டு போட்ட
தலையோட
எந்தத்
தூணைத்
தடவுறானோ..?

கடனாக வேண்டி
நேற்றுப்
கண்ணை மறைக்கப்
போட்டது
இன்னும் 
தலையை
விட்டுஇறங்காமல்...
.
.
அருள் நிலா வாசன்
(01.07.2015)                                 .

No comments:

Post a Comment