இலக்குகளை வைத்து
இரையினை
இழுத்து விழுத்த
இலட்சியமாய்
நினைப்பதில்லை
இரை தேடும்
பறவைகள்....
இறக்கையில் வைத்த
இரட்டிப்பு
நம்பிக்கையில்
இடம்பெயர
நேர்ந்தாலும்
வழி தவறிப்
போவதில்லை....
வேளை பார்த்து
வந்த பசியால்
வெந்து வயிறு
வேகமாய் எரிந்தாலும்
விழுந்துகிடக்கும்
வித்துக்களை
வீரமாய்
பொறுக்கி எடுக்கும்
வில்லத்தனம்
விரும்புவதில்லை....
பொருந்தி வாழப்
பொறுமையும்
அருந்தி உணவு
உண்ண மட்டும்
வாயைத் திறந்து
ஊக்கத்தில் எட்டும்
வானில் பறந்து
விண்ணையும் தாண்டி
வாழுது
இலக்குகளை நோக்கி....
அருள் நிலா வாசன்.
10.07.2015 .
இரை தேடும்
பறவைகள்....
இறக்கையில் வைத்த
இரட்டிப்பு
நம்பிக்கையில்
இடம்பெயர
நேர்ந்தாலும்
வழி தவறிப்
போவதில்லை....
வேளை பார்த்து
வந்த பசியால்
வெந்து வயிறு
வேகமாய் எரிந்தாலும்
விழுந்துகிடக்கும்
வித்துக்களை
வீரமாய்
பொறுக்கி எடுக்கும்
வில்லத்தனம்
விரும்புவதில்லை....
பொருந்தி வாழப்
பொறுமையும்
அருந்தி உணவு
உண்ண மட்டும்
வாயைத் திறந்து
ஊக்கத்தில் எட்டும்
வானில் பறந்து
விண்ணையும் தாண்டி
வாழுது
இலக்குகளை நோக்கி....
அருள் நிலா வாசன்.
10.07.2015 .

No comments:
Post a Comment