Wednesday, 22 July 2015

நீமட்டும் என்னோடு

ஒரு வேளை
சோற்றுக்கு
நான்
ஒட்டறை 
அடித்த போதும்
என் கைப்பிடியிலிருந்து
உன்னை
நான் விடவேயில்லை...
என் வழிப் பாதையில்
குத்திய முட்களை
உனக்கு
நான்
கூட இருந்தும்
காட்டவே இல்லை

உன்னை
அது வருத்துமோ
என்ற
வருத்தம் தான்
எனக்கு
அப்போதிருந்தது..

இப்போது மட்டும்
எனக்கென்ன குறை
நீமட்டும்
என்னோடு
இருந்திருந்தால்.......

அதை
சொல்லத் துடிக்கும்
மனசுக்குள்
சொல்லாமலே
துடிக்குது
என் இதயம்
இன்னும்
உனக்காகத்தான்.....

No comments:

Post a Comment