Thursday, 24 September 2020

 இளமையில் வறுமை

அவரையும்

விட்டு வைக்கவில்லை

இருந்தாலும் அப்பாவாய்
எங்களை உயரத்தில்
வைத்திருந்தார்
மாற்றுத் துணியில்லை
ஆனாலும் எங்களை
அப்பாவாய்
மண் தின்ன விடவில்லை
ஓட்டைகள் விழுந்த
ஒற்றைத் துணியில்
அவரின் வாழ்க்கையின்
வட்டங்கள்
ஒட்டிக் கிடக்கிறது
ஓடம் போல
எம்
வாழ்க்கை
ஒடாமல் நின்றிடுமோ
தரையில் மிதந்து....
.
அருள்நிலா வாசன்
24.09.2020