கூடுமட்டும் தனியாய் ஊர்வலம்
கும்பிடு போடுவார் ஓரமாய் நின்று
காடுவரையும் கண்ணீரில் மிதந்து
சூடமேற்றி தீயை வைத்துத்
தேம்பி அழுவார் அம்மா என்று ....
பொறுமையின் சிகரமாய் இருந்த தெய்வம்
போனபின் புலம்பியென்ன பயன்
முதுமையில் தாங்கிப் பிடிக்க இரு கரங்கள்
எமக்கென்று இருக்கும்வரையில்
பாரமில்லை அது வரம்
.
அருள்நிலா வாசன்
31.12.2017
Sunday, 31 December 2017
Friday, 29 December 2017
கடந்து வந்த பாதையிலே
உழைக்காமல்
உருக்கமாய்
வாங்கிப் பழகியவன்
வாழ்க்கை
எப்பொழுதும்
தூக்க நிலையில்தான்
இருக்கும்
................................................................
தொடராய்
திருட நினைப்பவன்
திருந்தி வாழ
நினைக்கும்போது
அவனிடன் இருந்ததெல்லாம்
திருடப்பட்டிருக்கும்
..................................................
தூய்மையாய்
உள்ளத்தை அள்ளிக்கொடு
மெல்லத் திருக்கும்
உனக்கான கதவுகள்
......................................................
ஆணவத்தை
வெளியேற்றுங்கள்
அன்பு தானாய்
உள்ளே வரும்
.................................................................
சுய நலம் காப்பவன்
சுற்றத்தைவிட்டு
சூனிய உலகிற்கு
தள்ளப்படுவான்
..............................................................
தவறை ஒத்துக்கொள்பவன்
மீண்டும் தப்பு
செய்ய மாட்டான்
...........................................................
மன்னிக்கத் தெரிந்தவன்
மனசெல்லாம் எப்பொழுதும்
அளவில்லா
ஆனந்தம்
.........................................................
இருப்பதை
பங்கிட விரும்பாத
இருவருக்குள்
அன்பு இருக்க
வாய்ப்புகள் இல்லை
.............................................................
கொடுப்பதும்
விட்டுக் கொடுப்பதும்தான்
வாழ்க்கையின்
மிகப்பெரிய பலம்
..........................................................
பூக்களை பாருங்கள்
புன்னகை தானாய்
மலரும்
......................................................
உருக்கமாய்
வாங்கிப் பழகியவன்
வாழ்க்கை
எப்பொழுதும்
தூக்க நிலையில்தான்
இருக்கும்
................................................................
தொடராய்
திருட நினைப்பவன்
திருந்தி வாழ
நினைக்கும்போது
அவனிடன் இருந்ததெல்லாம்
திருடப்பட்டிருக்கும்
..................................................
தூய்மையாய்
உள்ளத்தை அள்ளிக்கொடு
மெல்லத் திருக்கும்
உனக்கான கதவுகள்
......................................................
ஆணவத்தை
வெளியேற்றுங்கள்
அன்பு தானாய்
உள்ளே வரும்
.................................................................
சுய நலம் காப்பவன்
சுற்றத்தைவிட்டு
சூனிய உலகிற்கு
தள்ளப்படுவான்
..............................................................
தவறை ஒத்துக்கொள்பவன்
மீண்டும் தப்பு
செய்ய மாட்டான்
...........................................................
மன்னிக்கத் தெரிந்தவன்
மனசெல்லாம் எப்பொழுதும்
அளவில்லா
ஆனந்தம்
.........................................................
இருப்பதை
பங்கிட விரும்பாத
இருவருக்குள்
அன்பு இருக்க
வாய்ப்புகள் இல்லை
.............................................................
கொடுப்பதும்
விட்டுக் கொடுப்பதும்தான்
வாழ்க்கையின்
மிகப்பெரிய பலம்
..........................................................
பூக்களை பாருங்கள்
புன்னகை தானாய்
மலரும்
......................................................
Wednesday, 25 October 2017
காலங்கள் எமக்காக காத்திருப்பதில்லை
என்னில் ஒட்டிக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளைத்
தொட்டுக்கேட்டேன்
இப்போது நீயெங்கேயென்று
நீ சொல்லப் போகும்
அந்த வார்த்தைக்குள்
அடங்கியிருக்கிறது
என் கடைசி முடிவு
காலங்கள் எமக்காகக்
காத்திருப்பதில்லை
இறந்த காலத்தை நீயும்
கேட்டுத் தெரியும்
நிலமை வந்தால்
உன் கண்கள் மட்டும்
தனியாகத்தான்
கண்ணீர் வடிக்கும்
உன் நினைவுகளைத்
தொட்டுக்கேட்டேன்
இப்போது நீயெங்கேயென்று
நீ சொல்லப் போகும்
அந்த வார்த்தைக்குள்
அடங்கியிருக்கிறது
என் கடைசி முடிவு
காலங்கள் எமக்காகக்
காத்திருப்பதில்லை
இறந்த காலத்தை நீயும்
கேட்டுத் தெரியும்
நிலமை வந்தால்
உன் கண்கள் மட்டும்
தனியாகத்தான்
கண்ணீர் வடிக்கும்
Sunday, 10 September 2017
மறுபடியும் சந்திப்போம்
உறுதியாய்
நீ சொன்னதெல்லாம்
தலையில் அடிபட்டும்
என்
நினைவில் இருந்தது
ஆனால் நீ எதற்காக
என்னைப் பிரிந்தாய்
அதுமட்டும் இறுதிவரை
எனக்குப் புரியாமல் இருந்தது
இடுப்பிலொரு குழந்தை
இறுகக் கைபிடித்துத்
தரையில் நிற்கும்
இன்னொரு குழந்தை
இன்றெனது வழிப்பயணத்தில்
எதிர் பாராத சந்திப்பு
இனியென்ன பேசுவது
எனக்கென்று
இனியொன்றுமில்லை
இதுவரை நான்
வாழ்ந்ததே உனக்காகத்தானே
தேடினேன் உன்னை
நான் தெளிந்த பின்னர்
உன்னை எங்கெல்லாம்
தேடினேன்
இன்று உன்
வாடிய முகத்தில்
உன் வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு வரிகளும்
எழுதிக் கிடக்கிறது
என் வாழ்க்கைப் பயணத்தின்
இறுதி ஊர்வலத்திலாவது
மௌனத்தின் போர்வையில்
பாதை ஓரத்தில்
உன்னைப்
பார்த்ததில்
மகிழ்ச்சி
இன்னொரு ஜென்மமிருந்தால்
மறுபடியும் சந்திப்போம்.
.
அருள் நிலா வாசன்
10.09.2017
இறுகக் கைபிடித்துத்
தரையில் நிற்கும்
இன்னொரு குழந்தை
இன்றெனது வழிப்பயணத்தில்
எதிர் பாராத சந்திப்பு
இனியென்ன பேசுவது
எனக்கென்று
இனியொன்றுமில்லை
இதுவரை நான்
வாழ்ந்ததே உனக்காகத்தானே
தேடினேன் உன்னை
நான் தெளிந்த பின்னர்
உன்னை எங்கெல்லாம்
தேடினேன்
இன்று உன்
வாடிய முகத்தில்
உன் வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு வரிகளும்
எழுதிக் கிடக்கிறது
என் வாழ்க்கைப் பயணத்தின்
இறுதி ஊர்வலத்திலாவது
மௌனத்தின் போர்வையில்
பாதை ஓரத்தில்
உன்னைப்
பார்த்ததில்
மகிழ்ச்சி
இன்னொரு ஜென்மமிருந்தால்
மறுபடியும் சந்திப்போம்.
.
அருள் நிலா வாசன்
10.09.2017
Wednesday, 2 August 2017
குறும் கவிதைகள்
1.விதவையென்று சொல்லி
அவளை
விலக்கி வைக்காதீர்கள்
விளக்கேற்ற விடுங்கள்
அவள் கண்ணிலும்
ஒளி தெரியட்டும்
.
அருள் நிலா வாசன்
02.08.2017
2. வீதியில் தனியாகப் போவதனால்
விளம்பரமென நினைக்காதீர்கள்
வீட்டிலுங்கள் தங்கையும்
தனியாகத்தான் இருக்கிறாள்...
.
3. கையிற்கெட்டிய தூரத்தில்
இருப்பதனால்
கசக்கி முகராதீர்கள்
பூக்களை
வாழ விடுங்கள்...
4.
கட்டிய சேலை கசங்கி இருந்தால்
அவளை
களங்கப் படுத்தாதீர்
காலத்தின் பின் ஓடிக்
களைத்துப் போய் வந்திருப்பாள்
முடிந்தால் நல்ல கணவனாய்
கொஞ்சம் தேநீர்
ஊற்றிக் கொடுங்கள்
5.. .ஒற்றை வார்த்தையில்
அவளை
ஒதுக்கி வைக்காதீர்கள்
ஓரு வேளை
அவளின்னும்
பசியோடிருக்கலாம்
முடிந்தால் ஒரு குவளை
தண்ணீராவது கொடுங்கள்
அவள் தாகம் தீரட்டும்.
6. பார்வையாலே அவளை
கொல்லாதீர்கள்
பழைய மரத்தடியில்
அவள் பட்டினியால்
செத்துக் கொண்டிருக்கிறாள்.
அவளை
விலக்கி வைக்காதீர்கள்
விளக்கேற்ற விடுங்கள்
அவள் கண்ணிலும்
ஒளி தெரியட்டும்
.
அருள் நிலா வாசன்
02.08.2017
2. வீதியில் தனியாகப் போவதனால்
விளம்பரமென நினைக்காதீர்கள்
வீட்டிலுங்கள் தங்கையும்
தனியாகத்தான் இருக்கிறாள்...
.
3. கையிற்கெட்டிய தூரத்தில்
இருப்பதனால்
கசக்கி முகராதீர்கள்
பூக்களை
வாழ விடுங்கள்...
4.
கட்டிய சேலை கசங்கி இருந்தால்
அவளை
களங்கப் படுத்தாதீர்
காலத்தின் பின் ஓடிக்
களைத்துப் போய் வந்திருப்பாள்
முடிந்தால் நல்ல கணவனாய்
கொஞ்சம் தேநீர்
ஊற்றிக் கொடுங்கள்
5.. .ஒற்றை வார்த்தையில்
அவளை
ஒதுக்கி வைக்காதீர்கள்
ஓரு வேளை
அவளின்னும்
பசியோடிருக்கலாம்
முடிந்தால் ஒரு குவளை
தண்ணீராவது கொடுங்கள்
அவள் தாகம் தீரட்டும்.
6. பார்வையாலே அவளை
கொல்லாதீர்கள்
பழைய மரத்தடியில்
அவள் பட்டினியால்
செத்துக் கொண்டிருக்கிறாள்.
Thursday, 9 February 2017
உன்னுயிர் நான் தானே
பூவுக்குள் ஓழிந்திருக்கும்
வாசனையின் எல்லைக்கு
புதுப்புது அர்த்தங்கள்
வர்ணங்களாய் என் நெஞ்சில்
வரைந்திட்ட உன்னோடு
உன்னுயிருக்குள் நான்
கலந்து
உன் வழித்துணையாகவா
வாசனையின் எல்லைக்கு
புதுப்புது அர்த்தங்கள்
வர்ணங்களாய் என் நெஞ்சில்
வரைந்திட்ட உன்னோடு
உன்னுயிருக்குள் நான்
கலந்து
உன் வழித்துணையாகவா
பூமிக்குள் சுழியோடி
புத்தம்புது வழிதேடி
வாழ்ந்திடத்தான்
இப்பூமகளின் நெஞ்சத்தில்
ஒழிந்திருக்கும்
எண்ணங்கள்
ஒவ்வொன்றாய்
பூமஞ்சத்தில் நிறைவேற
உன் வழித்தடங்கள்
எப்பொழுதும்
உன்னருகில் நான் தொடர
என் வழித்துணையாக வா
உன் அன்புக்காய் காத்திருக்கும்
உன்னுயிர் நான் தானே...!!!
புத்தம்புது வழிதேடி
வாழ்ந்திடத்தான்
இப்பூமகளின் நெஞ்சத்தில்
ஒழிந்திருக்கும்
எண்ணங்கள்
ஒவ்வொன்றாய்
பூமஞ்சத்தில் நிறைவேற
உன் வழித்தடங்கள்
எப்பொழுதும்
உன்னருகில் நான் தொடர
என் வழித்துணையாக வா
உன் அன்புக்காய் காத்திருக்கும்
உன்னுயிர் நான் தானே...!!!
.
அருள் நிலா வாசன்
அருள் நிலா வாசன்
9.02.2017
தாய் வீடு
மாடி வீடு மெத்தை வீடு
மறுபடியும் அத்தை வீடு
மணவாளன் சொத்து வீடு
மணமாகிப் புகுந்த வீடு
மறுபடியும் அத்தை வீடு
மணவாளன் சொத்து வீடு
மணமாகிப் புகுந்த வீடு
கோடி பணம் உழைத்தாலும்
கோபுரத்தில் இருந்தாலும்
கொஞ்ச நேரம் உட்கார்ந்து
ஊர்ப் பயணம் உருவெடுக்கும்
கோபுரத்தில் இருந்தாலும்
கொஞ்ச நேரம் உட்கார்ந்து
ஊர்ப் பயணம் உருவெடுக்கும்
அனுப்பி வைத்த தாய் மனசை
அள்ளி அணைக்கத் தோன்றும்
நொடிப் பொழுது அன்னை மடியில்
நோகாமல் உரிமையுடன் தலைசாயும்
அள்ளி அணைக்கத் தோன்றும்
நொடிப் பொழுது அன்னை மடியில்
நோகாமல் உரிமையுடன் தலைசாயும்
தாயின் முந்தானை வியர்வை வாசம்
தலையிடிக்கு மருந்தாகும்
நோய் கூடப் பறந்தே போகும்
தாய் வீடு மனசுக்கு விருந்தாகும்
வாகனங்கள் இல்லையென்றாலும்
வேகின்ற வெய்யிலிலும்
எட்டி நடை போட்டு வேகமாய்
வாவென்றழைக்கும் தாய் வீட்டு முற்றம்
.
.
அருள் நிலா வாசன்
வேகின்ற வெய்யிலிலும்
எட்டி நடை போட்டு வேகமாய்
வாவென்றழைக்கும் தாய் வீட்டு முற்றம்
.
.
அருள் நிலா வாசன்
Subscribe to:
Comments (Atom)

