உழைக்காமல்
உருக்கமாய்
வாங்கிப் பழகியவன்
வாழ்க்கை
எப்பொழுதும்
தூக்க நிலையில்தான்
இருக்கும்
................................................................
தொடராய்
திருட நினைப்பவன்
திருந்தி வாழ
நினைக்கும்போது
அவனிடன் இருந்ததெல்லாம்
திருடப்பட்டிருக்கும்
..................................................
தூய்மையாய்
உள்ளத்தை அள்ளிக்கொடு
மெல்லத் திருக்கும்
உனக்கான கதவுகள்
......................................................
ஆணவத்தை
வெளியேற்றுங்கள்
அன்பு தானாய்
உள்ளே வரும்
.................................................................
சுய நலம் காப்பவன்
சுற்றத்தைவிட்டு
சூனிய உலகிற்கு
தள்ளப்படுவான்
..............................................................
தவறை ஒத்துக்கொள்பவன்
மீண்டும் தப்பு
செய்ய மாட்டான்
...........................................................
மன்னிக்கத் தெரிந்தவன்
மனசெல்லாம் எப்பொழுதும்
அளவில்லா
ஆனந்தம்
.........................................................
இருப்பதை
பங்கிட விரும்பாத
இருவருக்குள்
அன்பு இருக்க
வாய்ப்புகள் இல்லை
.............................................................
கொடுப்பதும்
விட்டுக் கொடுப்பதும்தான்
வாழ்க்கையின்
மிகப்பெரிய பலம்
..........................................................
பூக்களை பாருங்கள்
புன்னகை தானாய்
மலரும்
......................................................