Thursday, 9 February 2017

தாய் வீடு


மாடி வீடு மெத்தை வீடு
மறுபடியும் அத்தை வீடு
மணவாளன் சொத்து வீடு
மணமாகிப் புகுந்த வீடு
கோடி பணம் உழைத்தாலும்
கோபுரத்தில் இருந்தாலும்
கொஞ்ச நேரம் உட்கார்ந்து
ஊர்ப் பயணம் உருவெடுக்கும்

அனுப்பி வைத்த தாய் மனசை
அள்ளி அணைக்கத் தோன்றும்
நொடிப் பொழுது அன்னை மடியில்
நோகாமல் உரிமையுடன் தலைசாயும்
தாயின் முந்தானை வியர்வை வாசம்

தலையிடிக்கு மருந்தாகும்
நோய் கூடப் பறந்தே போகும்
தாய் வீடு மனசுக்கு விருந்தாகும்
வாகனங்கள் இல்லையென்றாலும்
வேகின்ற வெய்யிலிலும்
எட்டி நடை போட்டு வேகமாய்
வாவென்றழைக்கும் தாய் வீட்டு முற்றம்
.
.
அருள் நிலா வாசன்
9.02.2017

No comments:

Post a Comment