Tuesday, 26 May 2015

நான் வாழும் தேசம்..

என் தேகம்
உன் சுவாசம்
ஒன்றாகத்தானே
பயணிக்கின்றது...

உன் கண்கள்
பட்டுக் 
கலைகின்ற
மேகம்
என் கண்ணைப்
பார்க்கதானே
வருகின்றது....

உன் கைகள்
பட்ட
ஒரு பூவின்
வாசம்
என்னுள்ளே
வரும்பொழுது
என் எண்ணங்கள்
யாவும்
பூங்காவனம்..

நீ காட்டும் நேசம்
நிச்சயமாய்
இருக்கின்ற
வரைக்கும்
நீதானே
தினமும்
நான் வாழும் தேசம்..

26.05.2015
                                     



No comments:

Post a Comment