மறுபடியும்
மௌனம் கலைகிறது
பேசத்துடித்த
உன் வார்த்தைகளை
பேசாமல்
நான் தடுத்தேன்..
எத்தனை மணி
சென்றாலும்
இடத்தை விட்டு
நகரமாட்டேன்
ஏதோவொரு
ஏதோவொரு
நம்பிக்கை
உன்னிடம் மட்டும்
ஊன்றிக்கொண்டு
இருந்தது...
ஏக்கமாய் நீயும்
வெக்கத்தில் நானும்
வெக்கத்தில் நானும்
என்னோடு வந்துவிடு
வார்த்தைக்குள்
பிறந்த
அன்பின் ஆழம்
உன் ஏக்கத்தில்
தெரிந்தது
மானத்தை
மறைக்கத்
தன்
மானம் மட்டும்
தனிவழிக்குத்
துணையாக
வீதி விளக்கில்
துணிவாக நானும்
இருந்தாலும்
இன்று
உன் பேச்சைக்கேட்டால்....
ஓடிப்
போனவளென்றுதானே
ஊர்
என்னைச்சொல்லும்....
வியர்க்கிறது
உனக்கு
கொஞ்சம்
துடைத்துக்கொள்
வெளி நாடு போன
அண்ணை
விசா கிடைத்தால்
ஊருக்குத்
திரும்பி வருவான்..
நீ விரும்பியபடி
நானும்
நானும்
இதே பெயரில்
இந்த ஊரில்
இந்த ஊரில்
நாமிருந்தால்
முறையோடு
கேட்டுப்பார்
உன் பெயரும் என் பெயரும்
காகிதத்தில் ஒன்றுசேர்ந்து
என் கையெழுத்தய் மாற
என் கையெழுத்தய் மாற
உனக்காகக்
காத்திருப்பேன்
நீங்காத நினைவுகளை
சேர்த்து வைத்த
இவ்வீதியிலே
சேர்த்து வைத்த
இவ்வீதியிலே
பிரிந்தாலும்
விதியிருந்தால்
சந்திப்போம்
மறுபடியும்......
அருள் நிலா வாசன்
19.06.2015
,

No comments:
Post a Comment