கிட்டிய தூரத்தில்
நீயிருப்பது
தெரிந்தாலும்
கைதட்டிக் கூப்பிட
ஒருபோதும்
முடிவதில்லை
ஒட்டியே வந்திருக்கச்
சொல்லியே
வைத்ததுபோல்
எங்கிருந்தோ
வந்திருந்து
எத்திசையும்
எதிரொலிக்க
ஒத்திகை பார்க்கும்
ஜோடிக்கிளிகளின்
ஜொள்ளுப் பாசையில்
அள்ளித் தெளிக்கிறது
அன்பின் வேதம்...
எட்டியே இருந்தாலும்
தொட்டுப் பேசாத
உன்னன்பின்
வேதம்
புதிதென்று
என்னுள்ளே
ஒரு,நாதம்
இன்றைக்கும்
எதிரொலிக்க...
வெட்டியே போட்டாலும்
ஒட்டிக் கொள்ளும்
உன் அன்பில்
நான் நனைந்து
உறக்கத்தைத்
தள்ளிவைக்கும்
உன் நினைவுப்
புள்ளிகளில்....
வெள்ளிப் பாத்திரத்தில்
வெளிச்சத்தில்
அடி தெரிய
விளிம்புவரை
அள்ளிவைத்தேன்..
தெளிவாகத் தெரிகிறது
தண்ணீரில்
உன் முகம்
நான்
எட்டிப் பார்த்தபோது..
.
முடிவதில்லை
ஒட்டியே வந்திருக்கச்
சொல்லியே
வைத்ததுபோல்
எங்கிருந்தோ
வந்திருந்து
எத்திசையும்
எதிரொலிக்க
ஒத்திகை பார்க்கும்
ஜோடிக்கிளிகளின்
ஜொள்ளுப் பாசையில்
அள்ளித் தெளிக்கிறது
அன்பின் வேதம்...
எட்டியே இருந்தாலும்
தொட்டுப் பேசாத
உன்னன்பின்
வேதம்
புதிதென்று
என்னுள்ளே
ஒரு,நாதம்
இன்றைக்கும்
எதிரொலிக்க...
வெட்டியே போட்டாலும்
ஒட்டிக் கொள்ளும்
உன் அன்பில்
நான் நனைந்து
உறக்கத்தைத்
தள்ளிவைக்கும்
உன் நினைவுப்
புள்ளிகளில்....
வெள்ளிப் பாத்திரத்தில்
வெளிச்சத்தில்
அடி தெரிய
விளிம்புவரை
அள்ளிவைத்தேன்..
தெளிவாகத் தெரிகிறது
தண்ணீரில்
உன் முகம்
நான்
எட்டிப் பார்த்தபோது..
.

No comments:
Post a Comment