பட்டம் பதவி
பணம் புகழ்
கைவசமிருந்தால்
பந்தம் பாசம்
பன்மடங்காகி
பின்னிப் பிணைந்து
நாடி பிடித்துக்
கூடித் திரிய
பின்னாடியே
வரும்....
கஷ்டம் நஷ்டம்
கரைத்துக் குடித்துத்
திட்டம் போட்டுத்
திருந்திய
வாழ்வு
விரும்பியபடி
வாழத்துடிக்கும்
நேரம்
நோயின் பிடியில்
நரம்பும்
உணர்வும்
நலிந்து போனால்
பேச்சுத்
துணைக்குக் கூட
துணையாய்
இருக்க
ஊரும் உறவும்
விரும்பாது....
சொத்தும் சுகமும்
சுரண்டும் வரைக்கும்
சோடனை போட்டு
சொர்க்கத்தைக் காட்ட
வாரி அணைக்க
வரிசையில்
நிற்கும்
சொந்தமும் பந்தமும்.
நோயும் நொடியும்
நெருங்கிய
வாழ்வில்
நொந்தபின் தான்
ஞானக் கண்கள்
திறக்கும்
இதை
நன்றி யுள்ள
நாய்
கூடச் சொல்லும்
உன்
வாழ்க்கை
இது தானென்று....
,

No comments:
Post a Comment