அலங்கார நகரத்தில்
அடுக்கி வைத்த
கட்டிடத்தில்
எங்கென்று தேடுவது...
உன் முகம்மட்டும்
முகவரியாய்
இன்றுவரை
என்னிடம்
என் தொலைபேசி
அடித்தாலும்
எடுக்கத் தடுக்குது
என் மனம்
அது
என் வீட்டுநம்பரோ
என்று...
உன் குரல் மட்டும்
ஒரு தடவை
என் தொலைபேசியில்
எனக்காக
ஒலிக்காதா.?
இது தான்
என் கடைசிஆசை....
இனி செல்லாத
என் காதல்
இருந்தாலும்
சொல்லத்தான்
நினைக்கின்றேன்
இதுவரை
உயிருக்குள்
உயிராக
என்னோடு
வாழ்ந்த காதல்
மாதங்கள்
நாட்களாகின்ற
போதிலும்
சொல்லத் துடிக்குது
என் இதயம்
இறுதியாக
ஒரு தடவை
உனக்காகக்
துடிக்கும் வரை....
.
.
அருள் நிலா வாசன்
16.06.2015 .

No comments:
Post a Comment