Tuesday, 2 June 2015

ஒரு தடவை படித்துப்பார்

என் இதயச்சுவரில்
நீ எழுதி
மாட்டியதை
நேரம் இருக்கும்போது
ஒரு தடவை
படித்துப்பார்

அது உன் 
மறதிக்கு
மருந்து கொடுக்கும்

இன்னொரு தடவை
அப்படிச் 
சொல்லாதே
இனியும் தாங்காது
என் இதயம்

உன் இதயத்தை
துல்லியமாய்
படம் பிடிக்கச்
சொல்லு
அதிலொரு பிரதியை
எனக்கும் கொடு

என் கல்லறையில்
உன் கடைசிப் 
பரிசாகவே
அது என்னோடு
இருக்கட்டும்.......


No comments:

Post a Comment