சுவாசத்தை
அள்ளிக்கொண்டு
என்னைத் கிள்ளிவிட்டுச்
சென்ற சில்லென்ற
இளம்காற்று
உன் மீது தொட்ட போது
என்னதான்
சொன்னதோ..?
அது திரும்பி வந்தபோது
என் உதடுகளை
நனைத்தபடி
நீதான் தந்ததாக
உறுதியோடு
சொன்னது....
உன் நிழலாடும்
நெஞ்சுக்குள்
நிசப்தத்தைக்
கலைக்க
நெடுனேரம்
பறக்கிறது
பட்டாம் பூச்சி...
உன் சுவாசக் காற்றில்
கலந்துவிட்ட
என் மூச்சில்
உன் நினைவுகள்
என்னை
முழுதாய்
நனைக்கிறது
முதல் மழையாய்
பனித்
துளித்துளியாய்...
உன்னைத்
தீண்டிய காற்றுக்குள்
நீ திணித்து விட்ட
உள்ளன்பு
சொல்லாமல்
சொல்கிறது
நீ எனக்குத்
தானென்று......
03.06.2015
https://youtu.be/PcOC5L_KPfI

No comments:
Post a Comment