பரபரப்புக்களைத்
தள்ளிவிட்டுப்
பலமணி நேரம்
பக்கத்தில்
என்னையே
பார்த்துக்
கொண்டிருந்த
ஒற்றைக்
கதிரையின்
நட்பை
ஏற்று
அதனருகே
உட்கார்ந்து
உள்ளே
இழுத்துவிட்ட
சுவாசத்தைக்
கவனித்துக்
கொண்டிருந்தேன்...
மௌனத்தைக்
கலைத்து
மனம்விட்டுப்
பேசக்
காத்துக்கிடந்த
அந்த சில
மணித்துளிகள்
வீணாகிப் போக
இதுவரை
காத்திருந்த
எண்ணங்களை
நிறம் மாறிப் போக
நிம்மதியை
இழுத்துக் விழுத்தி
இன்னும் ஏதேதோ
நெஞ்சை அழுத்த
எங்கோ தூரமாய்
கேட்டது
உன் குரல்...
திறந்து வைத்த
சாளரத்தின்
உள்ளே
வந்த
இதமான
தென்றல்
காற்று
அனுமதிகேட்டு
என்னைத்
தொட்டது...
திரும்பிப் பார்த்தேன்
விரும்பியே
உன்னை
வெறும் கனவாயின்றி
நிஜமாய்
அது நீதானா என்று....
கொண்டிருந்த
ஒற்றைக்
கதிரையின்
நட்பை
ஏற்று
அதனருகே
உட்கார்ந்து
உள்ளே
இழுத்துவிட்ட
சுவாசத்தைக்
கவனித்துக்
கொண்டிருந்தேன்...
மௌனத்தைக்
கலைத்து
மனம்விட்டுப்
பேசக்
காத்துக்கிடந்த
அந்த சில
மணித்துளிகள்
வீணாகிப் போக
இதுவரை
காத்திருந்த
எண்ணங்களை
நிறம் மாறிப் போக
நிம்மதியை
இழுத்துக் விழுத்தி
இன்னும் ஏதேதோ
நெஞ்சை அழுத்த
எங்கோ தூரமாய்
கேட்டது
உன் குரல்...
திறந்து வைத்த
சாளரத்தின்
உள்ளே
வந்த
இதமான
தென்றல்
காற்று
அனுமதிகேட்டு
என்னைத்
தொட்டது...
திரும்பிப் பார்த்தேன்
விரும்பியே
உன்னை
வெறும் கனவாயின்றி
நிஜமாய்
அது நீதானா என்று....

No comments:
Post a Comment