நான் சொன்னால் நம்பவா போகிறீர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நடந்து போன சம்பவங்களை
திரும்பவும் ஓடி பிடிக்க
முடியாவிட்டாலும்
கடந்து போன அனுபவங்கள்
எனக்கு எப்பவுமே அலாதியானது.
நள்ளிரவில் நடுங்கிக் கொண்டிருந்த நான்., இப்போது உங்களிடம் நடந்ததைச் சொன்னால் நம்பவா போகிறீர்கள்.
வெளி உலகுக்கும் வீட்டிற்குமிடையில் வேகமாக இழுத்துக்கொண்டே
ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் வருகின்ற நல்ல நேரம், கெட்ட நேரங்களை
நாம் சந்திக்கத்தான் நேரிடும். அவை கொண்டுவரும் இம்சைகளை சகித்துக் கொண்டு
கடக்கத்தான் முடியுமே தவிர் தடுக்க முடியாது.
நான் இப்பொழுது சொல்ல வருவது ஒரே நாளில் நடந்த இந்த ஜென்மத்து என்னால் மறக்கவே முடியாத இரண்டு சம்பவங்கள்..
கடந்து போன வியாழக் கிழமை 27.7.2016 என்னை இழுத்துப் பிடித்து
நிறுத்தி...... நில்...... கவனி...... நேற்றுப் போல நாள் இன்று இல்லை என்று
அச்சுறுத்தின மாதிரி
இன்னொரு ஜென்மத்திலிருந்து இன்று நான் உங்களுடன் பேசிக் கொண்டிருப்பது எனக்கே ஒரு அதிசயம் தான்.
27.07.2016 வீட்டில் நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவத்தின் பின்னர் என்னை
சுதாகரித்துக் கொண்டு நான் வழமைபோல் வேலைக்குப் போயிருந்தேன். என்னோடு
வழமையாக வேலை செய்பவர் லீவு போட்டிருந்ததால் வேரோர் சக தொழிலாளி அந்த
ஷிப்டை கவர் பண்ணுவதற்காக ஓவர் டைம் வேலைக்கு வந்திருந்தார். அவர்
நடந்துதான் வேலைக்கு வருவார்.
அவர் என்னுடன் வேலை செய்யும்
நாட்களில் என்னுடைய காரில் கூட்டிச் சென்று அவருடைய வீட்டில்
இறக்கிவிட்டுத்தான் நான் வீட்டுக்கு வருவேன். அந்தி மாலையில் வேலை
ஆரம்பித்து ஆள் அரவம் இல்லாத நள்ளிரவில் வீடு வந்து சேருவது உங்களில்
பலருக்கு தெரிந்த விடயம் தானே....
நீங்க மாட்டருக்கு வாங்கோ....என்று என்னை மன்றாடுவது எனக்கு புரிகிறது.
இதோ.... இதோ...
இரண்டே நாட்களுக்கு முன்னர் வந்து என்னை ஒரு வழி பண்ணாமல் வழுக்குக்
கொண்டு போன அந்த வியாழக் கிழமை வேலை முடிந்து வெளியில் வர என் காரில் பயணம்
செய்யும் எண்ணம் இருந்ததால் என்னோடு வேலை செய்தவர் பக்கத்தில் இருந்த
சூப்பர் மார்க்கட்டில் கொஞ்சம் சாமான்கள் வாங்க வேண்டும். வாங்கவா என்று
என்னிடம் கேட்டார்.
நீதானே வாங்கப்போகிறாய் நான் உன்னைக் கொண்டுபோய்
வீட்டில் இறக்கிவிடுகின்றேன் என்று சொல்லவும் அவன் வாங்கு, வாங்கென்று
வாங்கி ஒரு ரொலி நிறைய பொருட்களை வாங்கி அடுக்கி இழுத்துக் கொண்டு வந்தான்.
நானும் அவனுக்கு இணையாக ரொலியை இழுக்க உதவி செய்து என் கார் பூட் இனுள்
அவனுடைய பொருட்களை ஏற்றுவதற்கு நான் என் பொருளை நிலத்தில் வைத்துவிட்டு
உதவி செய்தேன். எல்லாப் பொருட்களும் ஏற்றி நானும் காரில் ஏறிக் கொண்டேன்.
அவனுடைய வீட்டில் அவனையும் அவன் வாங்கிய பொருட்களையும் பத்திரமாய் இறக்கி
விட்டு நான் என் வீட்டு வாசலில் வந்து காரை நிறுத்தினேன். காரை விட்டு
இறங்கியதும் வழக்கம்போல ஹாண்ட் பாக் ஐ எடுக்க பின் கதவைத் திறந்தேன். அடடா
.... என் ஹாண்ட் பாக் எங்கே?............?????????.
கைப் பையைக்
காணவில்லை என்று அறிந்த பின்னர் அதன் உள்ளே குடியிருக்கும் என் கடன்
அட்டையை மறந்து.....வீட்டிற்குள் நான் வந்து....கம்னு.... இருக்கவா
முடியும்.
ஓடினேன்... ஓடினேன்....என் காரை ஓடினேன். அதே சூப்பர்
மார்கெட் வரை ஓடினேன்.... எனக்கு முன்னாடி பலமைல் வேகத்தூரத்தில் என்
இதயதுடிப்பு ஓடி கொண்டிருந்தது.
சூப்பர் மார்க்கெட்டில் வாசலில்
நின்ற செக்கியூரிட்டியிடம் சொன்னேன்...என் கைப்பையைக் காணவில்லை. அவனும்
என்னைக் கவலையோடு பார்த்தான். அந்த பார்வையைத் தவிர அவனிடம் இருந்து
எந்தவொரு நம்பிக்கையும் எனக்கு கிடைக்கவில்லை. அந்த நேரம் நள்ளிரவில்
கஷ்டமர் சேர்விஸ் வேற கடையை சாத்திடிச்சா....
என்னோடு வேலை முடித்து
சொப்பிங் செய்து வீடுவரை நான் கொண்டு போய் சேர்ந்த என் சக தொழிலாளிக்கு
தொலைபேசியில் அழைப்பு விட்டு....என் ஹாண்ட் பாக்கை கண்டியா என்று
கேட்டபொழுது ஆமா அது உன் தோழில் தொங்கிக் கொண்டிருந்ததை நான்
கண்டேனே...என்றார்.
எனக்கு வேறு வழி தெரியவில்லை.. வீடு நோக்கி
ஓடி வந்தேன்.
கடன் அட்டை என்னைக் கண்ட துண்டமாய் வெட்டிப் போட்டு அது வேற கண்ணீர்
அஞ்சலி செலுத்தியது போன்ற ஒரு ஃபீலிங் உடன் வீட்டை நோக்கி ஓடினேன்.
ஆனாலும் வீட்டுக்குள் நுழையும் போது பூனை போல நுழைந்தேன். நள்ளிரவு
தாண்டும் நேரம் நல்ல நல்ல கனவெல்லாம் வீட்டில் இருப்பவர்களுக்கு ஓடிக்
கொண்டிருக்கலாம். அதை எப்படி நான் குழப்பமுடியும். எனக்கு இருக்கும்
குழப்பம் அவர்களுக்கு எப்படித் தெரியும். பாவம் அவர்கள் தூங்கட்டும் என்று
பூனை போல நுழைந்தாலும் அப் ஸ்டெயர்ஸில் ஏறிப் போய் அப்பாவி போல படுக்க
முடியலையே.
கடன் அட்டையைத் தொலைத்துவிட்டேன். நல்ல வேளை அதைக்
கடனாய் எடுக்கும் போது என் ஆத்துக் காரரையும் துணைக்கு
அப்போது..........சேர்த்துக் கொண்டேன்.
அது இப்போது எனக்கு கை
கொடுத்தது.. எப்படி என்று கேட்கிறீர்களா. அதை வைத்துத் தானே இப்போது நான்
கடன் அட்டையை கான்சல் பண்ண காட் நம்பர் எடுக்க முடியும்.... என்ன.... நான்
சொல்வது சரிதானே.
அந்த நடு ராத்திரியில ஆத்துக்காரரை நித்திரையில் எழுப்பி.... இஞ்சாருங்கோ.....
உங்கட கிரெடிட் காட்டை நான் துலைச்சுப் போட்டன் எண்டு சொன்னாலும் சரி.,
உங்கடயும் என்ரயும் க்ரெடிட் காட் தொலைஞ்சு பொச்சு எண்டு அந்த நேரம்
சொன்னால் ஐம்புலனும் அடங்கி அன்புலன்ஸை நானே கூப்பிட வேண்டி வந்தாலும்
வருமெண்டு யோசிச்சுப் போட்டு...
அடிமேல் அடி வைத்துப் போய் அவருடைய
கோட்டில் இருந்த பர்சை உருவி எடுத்து., கீழ் வீட்டில் இருந்து க்ரிடிட்
காட்டின் மேல் இடத்திற்கு அழைப்புவிட்டு உன்னுடைய கார்ட்டும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம்... முதலில் கான்சல் பண்ணு அப்பிடீன்னு சொல்லுவேன்னு நினைச்சீங்களா...?
ஹலோ.....
கான் ஐ ஹெல்ப்.. யூ என்று அங்கால இருந்து சத்தம் வர நான் சத்தமே
இல்லாமல்...... எனக்கு ஹாட் அட்டாக்.... வார மாதிரி கிடக்கு....அதுக்கு
முதல் என் க்ரெடிட் காட்டை கான்சல் பண்ணிவிடு தாயே என்றேன். என்
வேண்டுகோள் நிறைவேற........ தண்ணி எங்க போத்திலெங்க என்று தடவி எடுத்துக்
குடிச்சுப் போட்டு இழுத்துப் போர்த்துக்கொண்டு சிவ....சிவா
என்று சொல்லுவோருக்கு....அபாயமில்லை எண்டு நினைச்சுக் கொண்டு....
நித்திரைக்கு குழுசை இல்லாமலே நீட்டி நிமிர்ந்து படுத்ததுதான் தெரியும்.
பரலோகம் போன மாதிரி நல்ல நித்திரை..
காலையில் எழுந்தேன் .... பழைய
குருடி கதவைத் திறவடி....எண்டு கடமையில் இறங்கினேன்.. ஒன்பது மணி இருக்கும்
வீட்டுத் தொலை பேசி.... விடாமல் அடித்தது...
அனேகமாக வீட்டுத் தொலை பேசி தொல்லையான வியாபார அழைப்புக்களாக இருக்கும் என்பதால் நான் அதை எடுக்க விருப்பம் இல்லாமல் எடுப்பேன்.
ஆனாலும் வெள்ளிக் கிழமையும் அதுவுமா விடாமல் அடிக்குதே....யாரோ எனக்கு ரொம்பவும் வேண்டியவராய் இருக்குமோ என்று எடுத்தேன்.
ஹலோ........
அடடா......எனக்குத் தெரிந்த குரலாய் இருக்கிறதே.... நானும் பதிலுக்கு சும்மா ஒரு ஹலோ சொன்னேன்.
நான்......... உன் பர்சனல் மனேஜர் கதைக்கிறேன்.. உன் பர்சை காணவில்லையா...
என்று அவள் என்னைக் கேட்டாள்... பர்ஸ் மட்டுமா....காணவில்லை...என்
பரம்பரையே அதுக்குள்ளதான் இருக்கு என்றேன்.
அப்படியா...... சந்தோசம்...கவலைப் படாதே
பொலீஸ் ஸ்டேசனில் அது உனக்காகக் காத்திருக்கு என்றாள்....
டக்கு.....டக்கு....டக்கு.... இது என் இதயம் அப்போது அப்படித்தான்
துடித்தது. தேடி வந்த சீதேவித் தொலை பேசியைத் தடவிக் கொண்டு மெதுவாக
வைத்தேன்.
எப்படி அது அங்கே போனது...?
கை பர்ஸ் காத்திருக்கு என்றுதானே..... சொன்னாள்.
கடன் அட்டையும் உள்ளே இருக்கு சொல்லவில்லையே.
என் பதட்டம் இன்னும் அதிகமாயிற்று.
என் வாழ்க்கையில நான் பொலீஸ் ஸ்டேசினில கால் வைத்ததில்லை..அது எப்பிடி இருக்கும் என்றும் எனக்கு தெரியலயே.
இப்போ....அதற்கு ஒரு துணையைத் தேட வேண்டுமே..
அரக்க பரக்க....அத்தனை வீட்டு வேலைகளையும் செய்து முடித்துவிட்டு என்னை
அடையாளம் காட்டும் என் ஐடி களையும் எடுத்து அடுக்கி வைத்துவிட்டு என்
ஆத்துக் காரருக்காகவும் அவரின் அர்ச்ச்தைகளை வேண்டிக் கட்டவும் என்னை தயார்
படுத்தினேன்.
நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. வேலை விட்டு வந்து
அவர் காரை விட்டு இறங்கியதும் இறங்காதுமாய் இப்படி ஒரு சங்கதி என்று மெதுவாக
அவிட்டு விட்டேன். ஏறு காரில் என்றார். ஏறத்தான் வேணும். இல்லாட்டி வேறு
காரில்லை.
கிளம்பியது கார் காவல் நிலையத்தை நோக்கி. துணையோடு வந்த
துணிவோடு சென்று கதவைத் திறந்தேன்.
ரிசெப்சனில் இரண்டு பெண்கள்
இருந்தார்கள். ஆத்துக்காரர் என்னைப் பார்த்து அவர்களைக் கேழும் என்றார்..
அவர்களை என்ன........கேட்கிறது....
அதோ அந்த மூலையில் என் ஹாண்ட் பாக் என்னைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பது என் கண்ணுக்குப் பளீச் என்று தெரிகிறதே..
எட்டி நடை போட்டேன்... எங்கிருந்தோ வந்தது ஒரு எனர்ஜி.
என் அடையாளத்தை காட்டினேன்... என் பெயரைப் பார்த்ததும் நான் வாயே திறக்கவில்லை
அதோ அந்த ஹாண்ட்...பாக்......
அது உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது. ஒருவர் .........ஸுப்பர்
மார்கெட்டு....கார் பாக்கில் இருந்து கையோடு கொண்டு எங்களிடம் ஒப்படைத்தார்
என்றாள்...
நான் சொன்னால் நம்பவா போகிறீர்கள்.......
கைப் பேர்சைத் திறந்தேன்....கிரெடிட் காட் என்னைப் பார்த்து ஹலோ.... என்றது.
ஷா.....அனியாயமாய் உன்னை நான் நேற்று இரவே
கான்சல் பண்ணீட்டேனே என்றேன்.
அதை களவெடுத்து கஷ்டப்படாமல் கண்டபடி செலவு செய்து கரையேற
நினைக்காமல்......கார் பாக்கில் கண்டெடுத்த என் ஹாண்ட் பாக்கை குண்டு என்று
நினைத்தானோ........தெரியவில்லை
கையோடு எடுத்துச் செல்ல அவ்வளவு
துணிவோடு காவல் நிலையம் வரை பயமின்றிப் பயணித்து ஒப்படைத்த அந்த
புண்ணியவானின் விபரங்கள் தெரியாமல்.... நான் விழித்தபடியே..... நன்றியை
மட்டும் என் நினைவெல்லாம்
நிறுத்தி வைத்துக்கொண்டு மெல்ல நகர்ந்தேன்.
நல்ல மனிதர்கள் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள்
என்னும் நம்பிக்கையுடன்........
நகர்ந்து போன வியாழன் ஜுலை 27 2016 என்னால்
மறக்க முடியாத ஒரு நாள்.
அருள் நிலா வாசன்
29.07.2016

No comments:
Post a Comment